மார்ச் 11-இல் விஜய்சேதுபதியின் சிந்துபாத் டீசர்!

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 11:10 am
sindhubath-second-look

இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, அஞ்சலி நடிப்பில் யுவன் சங்கர்  ராஜா இசையமைப்பில் உருவாகி வரும் சிந்துபாத் திரைப்படத்தின் டீசர் இந்த மாதம் 11ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் விஜய்சேதுபதி, தற்போது அஞ்சலியுடன் "சிந்துபாத்" எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.. இப்படத்தை அருண்குமார் இயக்கி வருகிறார். இவர் முன்னரே விஜய் சேதுபதியுடன் "பண்ணையாரும் பத்மினியும்", "சேதுபதி" ஆகிய படங்களை இயக்கியவர். 

இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை வெளியானது. அதோடு டீசர் வரும் 11ம் தேதி வெளியாகவுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இப்படத்துக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஜய்கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

newstm.in

      

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close