சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'சிவப்பு மஞ்சள் பச்சை'

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 12:48 pm
sasi-s-next-movie-sivappu-manjal-pachai

பிச்சைக்காரன் திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் சசி இயக்கிவரும் படத்திற்கு 'சிவப்பு மஞ்சள் பச்சை' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

2016ம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் பெரும் பெற்றியை பெற்றது. இதனையடுத்து இயக்குநர் சசி ஜீ.வி.பிரகாஷ் - சித்தார்த் இருவரும் வைத்து புதிய திரைப்படம் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. 

இந்த திரைப்படத்திற்கு பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு புதுமுக இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைத்துள்ளார்.

 

 

இதில் சித்தார்த்த டிராபிக் போலீசாகவும், ஜிவி பிரகாஷ் ரேசராகவும் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படத்திற்கு 'சிவப்பு மஞ்சள் பச்சை' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்  இன்று வெளியிடப்பட்டது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close