விஜய் டைலாக்கை பிரச்சாரமாக்கும் தேர்தல் ஆணையம்!

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 02:21 pm
vijay-style-in-election-commission

சர்க்கார் படத்தில்  விஜய் சொல்லும் 49P பிரிவை விழிப்புணர்வு பிரச்சாரமாக முன்னெடுத்துள்ளது தேர்தல் ஆணையம். 

கடந்த ஆண்டு முருகதாஸ் இயக்கத்தில்  தளபதி விஜய் நடிப்பில்  வெளியான திரைப்படம் சர்க்கார் .  இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார், யோகிபாபு போன்றோர் நடித்திருந்தனர். இலவசங்கள் வேண்டாம் என்று பேசிய இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதுடன், அரசியல் வட்டாரங்களிடம் கடும் எதிர்ப்பையும் சந்தித்தது.

சர்க்கார் திரைப்படம் "தங்கள் ஓட்டு கள்ள ஓட்டாக போடப்பட்டால்  அதனை செல்லாது  என நிரூபிக்க சட்டம் 49 P பிரிவு உள்ளது" என்பதை பலருக்கும் தெரியப்படுத்திய படமாகும்.   மேலும் வாக்களிப்பதின் அவசியம் பற்றியும்  இந்த திரைப்படம் பேசியது.

இந்நிலையில் சர்க்கார் பட பாணியில் தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவங்கியுள்ளது.  இதை ரசிகர்கள் பலரும் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close