4 மொழிகளில் வெளியாகும் விஜய் தேவரகொண்டா திரைப்படம்

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 03:29 pm
vijay-s-dear-comrade-teaser-in-four-languages

தெலுங்கில் ஹிட் அடித்த அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் ரசிகர்களை பெற்ற நடிகர் விஜய் தேவரகொண்டாவின் அடுத்த திரைப்படமான டியர் காம்ரேட் 4 மொழிகளில் வெளியாக உள்ளது. 

விஜய் நடிப்பில் நோட்டா திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. பரத் கம்மா இயக்கியுள்ள இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில், யாஷ் ரங்கினேனி தயாரித்துள்ளார். இதில் கீதா கோவிந்தம் திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்து வருகிறார்.

ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்து வருகிறார். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கிய டியர் காம்ரேட் படம் , ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.

மே மாதம் படம் வெளியாக உள்ளது. இந்த படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது. டியர் காம்ரேட் பட டீசர் வரும் 17ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close