நடிகர் ஆர்யாவின் வில்லன் சிம்பு?

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 03:30 pm
simbhu-to-act-in-arya-s-next

மஃப்டி என்ற கன்னட திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் ஆர்யாவுக்கு வில்லனாக நடிகர் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

ஹீரோக்கள் வில்லனாக நடித்து பல திரைப்படங்கள் தற்போது வெளியாகி வருகிறது. இந்த வரிசையில் நடிகர் சிம்பு வில்லனாக நடிக்க இருக்கிறார். கடைசியாக சிம்பு நடிப்பில் வெளியான வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனையடுத்து மகா மற்றும் மாநாடு படத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார். 

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் மாநாடு திரைப்படத்திற்காக உடல் எடை சிம்பு குறைத்து வருகிறார். இந்த இருபடங்களைத் தொடர்ந்து ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்க உள்ள படத்திலும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடித்து வெற்றிபெற்ற ‘மஃப்டி’ படத்தின் தமிழ் ரீமேக்காக இந்தப் படம் உருவாக உள்ளது. இதில் நாயகனாக ஆர்யா நடிக்க அவருக்கு வில்லனாக சிம்பு நடிக்க இருக்கிறார். படத்தின் முக்கியமான கதாபாத்திரமொன்றில் சரத்குமார் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close