ரஜினியின் அடுத்த படம் மும்பையில் !

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 04:30 pm
rajini-film-in-mumbai

முருகதாஸ் இயக்க விருக்கும் ரஜினிகாந்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில்  நடைபெற உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த பொங்கல் ரிலீசாக‌ வந்த படம் பேட்ட.  இந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார்.  இந்தப் படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். இந்த திரைப்படத்தில் நயன்தாரா மற்றும்  கீர்த்தி சுரேஷ்  நடிப்பார்கள் என தெரிகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் மும்பையில் நடத்த இருக்கிறார்களாம்  படக்குழு.  

ஏற்கனவே ரஜினிக்கு 'பாட்ஷா', 'காலா' போன்ற படங்களால் மும்பையுடன் நல்ல தொடர்பு இருக்கிறது.  அதேபோல, முருகதாஸும் பாலிவுட்டில் 'கஜினி', 'அகிரா' ஆகிய படங்களை  மும்பையில் இயக்கியுள்ளார்.  பின்னணி, போலீஸ் கதை, ரஜினிகாந்த் - முருகதாஸ் கூட்டணி  அமைந்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close