ஹாலிவுட்டிற்கு பறக்கும் முயற்சியில் நிவேதா பெத்துராஜ்

  Newstm Desk   | Last Modified : 09 Mar, 2019 11:16 am
nivetha-to-try-her-luck-in-hollywood

அடியே அழகே பாடலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற நடிகை நிவேதா பெத்துராஜ், அடுத்தடுத்து பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி உள்ள நிலையில் ஹாலிவுட்டில் நடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

பொன் மாணிக்கவேல், ஜகஜால கில்லாடி, பார்டி ஆகிய திரைப்படங்கள் நிவேதா பெத்துராஜ் நடிப்பில் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. 

இதனையடுத்து விஜய் சேதுபதியுடன் விஜய் சந்தர் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. ஒருநாள் கூத்து திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான இவருக்கு ஹாலிவுட்டில் நாயகியாக வேண்டும் என்பது தான் கனவாம். அதனை நிறைவேற்ற மே அல்லது ஜூன் மாதத்தில் இவர் அமெரிக்கா செல்ல இருக்கிறார். 

அங்கு சில வேலைகள் இருப்பதாகவும் அவை கைக்கூடி வந்தால் நல்ல செய்தி வரும் என்றும் நிவேதா தெரிவித்துள்ளார். பிரியங்கா சோப்ரா போல ஹாலிவுட்டிலும் ஒரு ரவுண்டு வரவேண்டும் என்று தெரிவித்திருக்கும் நிவேதா, அவெஞ்சர்ஸ் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close