சூப்பர் தயாரிப்பு நிறுவனத்துடன் இணையும் விஜய்

  Newstm Desk   | Last Modified : 09 Mar, 2019 11:18 am
super-goods-films-to-produce-vijay-film

பல வெற்றிப்படங்களை கொடுத்த கூட்டணியான விஜய் மற்றும் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் மீண்டும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

வெளியாகும் எல்லா படமும் வெற்றி என மார்கெட்டில் உச்சத்தில் இருக்கிறார் நடிகர் விஜய். இவர் தற்போது இயக்குநர் அட்லீ இயக்கத்தில் தளபதி 63 திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

இதற்கு பிறகு தளபதி 64 திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்க இருப்பதாகவும், அந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் ஏற்கனவே விஜயை வைத்து பூவே உனக்காக, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், ஷாஜகான், திருப்பாச்சி, ஜில்லா என பல படங்களை தயாரித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close