நடிகர் விஜயின் அடுத்த திரைப்படத்தை இயக்கப்போவது யார்?

  Newstm Desk   | Last Modified : 09 Mar, 2019 03:50 pm
who-is-going-to-direct-actor-vijay-s-next-film

தளபதி விஜயின் படத்தை தான் இயக்க விரும்புவதாக  இயக்குனர்  மோகன்ராஜா கூறியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அட்லி  இயக்கதில் விஜய் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.  இவர்களின் கூட்டணி மூன்றாவது முறையாக  இணைந்துள்ளது.  இந்த திரைப்படத்தில் நயன்தாரா நடிக்கிறார்.  மேலும் கதிர், யோகிபாபு, டேனியல் பாலாஜி, விவேக் உள்ளிட்டோரும்  இப்படத்தில் இணைந்துள்ளனர்.

தளபதி 63 படத்தின் இசையை  ஏ.ஆர்.ரகுமான் அமைத்து வருகிறார்.  இந்நிலையில்  இயக்குனர்  மோகன்ராஜா விஜயின் தளபதி 64 யை இயக்குவார் என தெரிகிறது.  இவர் "தனி ஒருவன்,ஜெயம் ,வேலைக்காரன்,  போன்ற ஹிட் படங்களை இயக்கியவர். மேலும் மோகன்ராஜா விஜயின் வேலாயுதம் படத்தை இயக்கியுள்ளார்.

சமீபத்தில் தனியார் கல்லூரியில்  நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் மோகன்ராஜா, ‘விஜய் சாருடன் வேலாயுதம் படம் பண்ணினேன்.  திரும்பவும் படம் பண்ணுவேன்’ என தெரிவித்தார்.

இயக்குநர் மோகன்ராஜா பேசிய வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close