யாவரும் நலம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம்: உறுதி செய்த மாதவன்

  Newstm Desk   | Last Modified : 09 Mar, 2019 12:44 pm
yavarum-nalam-part-2

யாவரும் நலம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

விக்ரம் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியான படம் யாவரும் நலம். இப்படத்தில் மாதவன், நீத்து சந்திரா, சரண்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வசூல் ரீதியாகவும் நல்ல வரவேறப்பு பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராகவிருப்பதாக மாதவன் தெரிவித்துள்ளார். மாதவன் தற்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை கதையில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் யாவரும் நலம் இரண்டாம் பாகத்தில் மாதவன் நடிப்பார் எனத் தெரிகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close