இரண்டாவது வாரத்தில் தடம் பதிக்கும்  தடம்

  Newstm Desk   | Last Modified : 09 Mar, 2019 02:53 pm
thadam-second-week

அருண் விஜய் நடைப்பில் மார்ச் 1ல் திரைக்கு வந்த தடம் படத்தின் இரண்டவது வார கொண்டாட்டத்தை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் தடம்.  இந்த படத்தில்அருண்விஜய் இரு வேறுபட்ட தோற்றங்களில் நடித்துள்ளார். மேலும் தன்யாஹோப்,வித்யா பிரதீப் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.  தடம் படத்திற்கான இசையை அருண் ராஜ் அமைத்துள்ளார்.  மார்ச்  1ல்  திரைக்கு வந்த இந்த படம் நல்ல ரேட்டிங்கை பெற்றது.

இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக அருண் விஜய் மற்றும் படக்குழுவினர்  தடம் வெற்றி பயணம் என்னும் பெயரில் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக  சேலத்தில் உள்ள தனியார் கல்லூரிக்கு  அருண் விஜய் மற்றும் படக்குழுவினர் சென்றுள்ளனர். அங்குள்ள ரசிகர்களுக்காக அருண் விஜய் மேடையில் அத்தாரு உத்தாரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோவை அருண் விஜயின் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். 

இந்நிலையில் தடம் திரைக்கு வந்து  2 வாரங்கள் ஆனதை  படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.  மேலும் அருண் விஜய்க்கு திரை உலகினர் மற்றும்  ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 


 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close