பிளாஸ்டிக் வேண்டாம்: குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சூர்யா

  Newstm Desk   | Last Modified : 09 Mar, 2019 01:09 pm
suriya-teams-withtn-government-for-a-cause

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி மாணவர்களிடம் சூர்யா எடுத்து கூறும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தமிழகத்தில் இந்தாண்டு முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பிளாஸ்டிக் குறித்து மக்களுக்கு அரசு சார்பில் விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் தற்போது நடிகர் சூர்யா அரசுடன் இணைந்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை உருவாக்கி உள்ளார். அந்த வீடியோவில் பள்ளி மாணவர்களின் மதிய உணவு வேளையில் அவர்களிடம் பேசும் சூர்யா, பிளாஸ்டிக் பற்றிய கேள்விகளைக் கேட்கிறார். ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களை எல்லாம் வகைப்படுத்தி அவை அனைத்தையும் ஏன் உபயோகிக்கக் கூடாது, அதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன, அது எப்படி நம்மையே மீண்டும் பாதிக்கிறது என்பதைப் பற்றி விளக்கமளிக்கிறார்.

இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close