கத்தியில் வித்தை காட்டும் வரலட்சுமி!

  Newstm Desk   | Last Modified : 09 Mar, 2019 02:00 pm
varalakshmi-sarathkumar-video

ராஜபார்வை இறுதிக்கட்ட படப்பிடிப்பின் போது வரலட்சுமி சரத்குமார் உண்மையான கத்தியை சுழற்றும்  வீடியோ காட்சியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

போடா போடி படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு ஹீரோயினியாக அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார்.  மேலும் இவர் சர்கார் படத்தில் கைதேர்ந்த் அரசியல் ராஜ தந்திரியாக நடித்து பாரட்டுகளை  பெற்றதுடன்  விஷாலின் சண்டைகோழி 2 படத்தில் வில்லியாக மிக  அருமையான வில்லத்தனத்தை காட்டியிருந்தார்.  

இவரின் மதகஜ ராஜா  படபிடிப்பு நடந்து வருகிறது.  மேலும் வரலட்சுமி சரத்குமார் இயக்குனர் ஜேகேயின் இயக்கத்தில் ராஜ பார்வை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இதில் வரலட்சுமி கண் தெரியாத பெண்ணாக நடிக்கிறார்.

 

இந்நிலையில் ராஜபார்வை படத்தின் இறுதி கட்ட படபிடிப்பின் போது வரலட்சுமி சரத்குமார் உண்மையான கத்தியை லாவகமாக  தன் கையில் வைத்து சுழற்றும் காட்சியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர்  "யார் சொன்னது பெண்களால் சண்டையிட முடியாதென" என்று பதிவிட்டுள்ளார்.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close