காதலர் தினம் நாயகியின் தற்போதைய நிலை!

  Newstm Desk   | Last Modified : 09 Mar, 2019 02:56 pm
kathalar-dhinam-heroin-states

‘‘காதலர் தினம்"  திரைப்படத்தில் நாயகியாக நடித்த சோனாலி புற்று நோய் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளார்.

‘‘காதலர் தினம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சோனாலி.  இவர் பாலிவுட்டிலும் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.  இந்நிலையில் கேன்சரால் பாதிக்கப்பட்டிருப்பதை சமூக வலைத்தளங்களில் சோனாலி பகிர்ந்திருந்தார்.  இந்த பதிவு  அவரது ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  மேலும் இந்தியாவில் சிகிச்சை எடுத்துவந்த இவர்  உயிர்ப்பிழைப்பதற்கு 30% மட்டுமே வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது. 

இதை தொடர்ந்து அமெரிக்காவில் கீமோ தெரப்பி சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் அனைவரது பிரார்த்தனையுடனும், மன வலிமையுடனும் சிகிச்சை பெற்று வந்த சோனாலி, தற்போது புற்றுநோயில் இருந்து மீண்டுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close