பாகுபலி 3ம் பாகம் எடுத்தால் நடிப்பேன்: ஆர்வம் தெரிவித்த ஹாலிவுட் நடிகர்

  Newstm Desk   | Last Modified : 09 Mar, 2019 02:55 pm
nick-fury-aka-samuel-l-jackson-says-he-wants-to-star-in-baahubali-3

உலகளவில் பெரும் வெற்றியை பெற்ற ராஜமௌலியின் பாகுபலி திரைப்படத்தின் 3ம் பாகம் உருவானால் அதில் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று ஹாலிவுட் நடிகர் நிக் ஃபியூரி எனப்படும் சாமுவேல் ஜாக்சன் தெரிவித்துள்ளார். 

இந்திய சினிமாவின் வரலாற்றில் மிக முக்கியமான திரைப்படங்களுள் ஒன்று பாகுபலி. இந்த திரைப்படத்தை இயக்குநர் ராஜமௌலி இயக்கி இருந்தார். இதன் இரண்டு பாகங்களும் உலகளவில் பெரும் வெற்றியை பெற்றன.

இதனையடத்து ராஜமௌலி தற்போது ஆர்ஆர்ஆர் படத்தில் பிசியாக இருக்கிறார். இந்நிலையில் அவெஞ்சர்ஸ் படத்தில் நிக் ஃபியூரி  கதாபாத்திரத்தில் நடித்த சாமுவேல் ஜாக்சன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பாகுபலி பற்றி பேசி உள்ளார். 

அந்த பேட்டியில் உங்களுக்கு பாலிவுட் பழடங்களில் நடிக்க விருப்பம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பபட்டது. அதற்கு பதில் அளித்த சாமுவேல் ஜாக்சன், "பாகுபலி படத்தின் 3ம் பாகம் உருவானால் அதில் நடிக்க ரெடி" என கூறியிருக்கிறார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close