சூப்பர் ஸ்டாருடன் நடிக்க மறுத்த சாய் பல்லவி... ராஷ்மிகாவிடம் பேச்சு வார்த்தை

  Newstm Desk   | Last Modified : 09 Mar, 2019 03:06 pm
sai-pallavi-says-no-to-mahesh-babu

அணில் ரவிப்புடி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் திரைப்படத்தில் நடிக்க் நடிகை சாய் பல்லவி மறுத்துவிட்ட நிலையில், அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ராஷ்மிகா மந்தனா மற்றும் கத்ரீனா கைஃப் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. 

பிரேமம் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமான நடிகை சாய்பல்லவி, அதன் பிறகு பல தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். பின்னர் கரு படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். இந்நிலையில் தனுஷுடன் இணைந்து அவர் நடித்த மாரி 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

குறிப்பாக இந்த திரைப்படத்தின் ரவுடி பேபி பாடல் உலகளவில் டிரெண்டாகி வருகிறது. இந்நிலையில் இவர் அடுத்ததாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. அந்த படத்திற்கான கதையை ஃபன் அண்ட் ஃபரஸ்டிரேஷன் படத்தை இயக்கிய அணில் ரவிப்புடி கூறியதாகவும், சாய்பல்லவிக்கு அந்த கதை பிடித்ததாகவும் கூறப்பட்டது. 

ஆனால் தற்போது சாய்பல்லவி அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருக்கு பதிலாக ராஷ்மிகா மந்தனா மற்றும் கத்ரீனா கைஃப் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close