நயன்தாராவிற்கு ஸ்பெஷலாக... வாழ்த்து  சொன்ன இயக்குனர் ! 

  Newstm Desk   | Last Modified : 09 Mar, 2019 08:54 pm
vignesh-shivn-s-women-s-day-wishes-to-nayanthara

நயன்தாராவிற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் மகளிர் தின‌ வாழ்த்துக்களை  கொஞ்சம் ஸ்பெசலாக சொல்லியிருப்பது நெட்டிச‌ன்களிடையே சந்தேகத்தை உருவாக்கி உள்ளது.

'போடா போடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். பின்னர் இவர் இயக்கத்தில் வெளியான 'நானும் ரவுடி தான்' படம் சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா நடித்திருந்தார். நயன்தாரா- விக்னேஷ் சிவன் இடையே காதல் மலர்ந்ததாக செய்திகள் வெளியான நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதத்தில் இருவரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

மேலும் விருது நிகழ்ச்சிகளுக்கும் இருவரும் சேர்ந்து சென்றதுடன்  இருவரும் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு ஜோடியாக சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இயக்குனர்  விக்னேஷ் சிவன் நயன்தாராவிற்கு மகளிர் தின வாழ்த்துக்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.அதில் விக்னேஷ் சிவன் " எனது உலக அழகியே! உன்னைப்போல் ஒருத்தி இல்லையே! என பதிவிட்டுள்ளார். இவ்வாறான பதிவு நெட்டிசன்கள் இடையே சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close