ஏப்ரல் 12 ல் திரைக்கு வரும் தேவி 2 !

  Newstm Desk   | Last Modified : 09 Mar, 2019 05:32 pm
devi2-release-in-april-12

பிரபுதேவா  நடிப்பில் உருவாகி வரும் தேவி 2 படம் ஏப்ரல் 12ல் திரையிடப்படும் என  படக்குழு அதிகாரப்பூர்வமாக  அறிவித்துள்ளது.

 2016ல் பிரபு தேவா, தமன்னா நடிப்பில் திரைக்கு வந்த படம் தேவி. இப்படத்தினை ஏ.எல் விஜய் இயக்கினார். ஹாரர், காமெடி கலந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய  மொழிகளில் திரையிடப்பட்டது. இப்படத்தில் தமன்னா கிராம பெண்ணாகவும், நகர பெண்ணாகவும் இரு வேறு தோற்றங்களில் நடித்தார். கிராம பெண் வேடத்தில் மிகவும் அடக்கமான பெண்ணாகவும், ஹீரோயினாக மாறும் இரண்டாம் கட்டத்தில் படு கிளாமராகவும் நடித்து அசத்தி இருந்தார். மேலும் பிரபு தேவாவின் மற்ற படங்களை போலவே இந்த படத்திலும் நடனத்திற்கு பஞ்சம் இல்லை.  இதனையடுத்து, தேவி படத்தின் இரண்டாம் பாகம் படமாக்க முடிவு செய்யப்பட்டது.அதன்படி ஏ.எல் விஜய் படபிடிப்பு பணிகளை தொடங்கினார். பிரபு தேவாவும், தமன்னாவுமே இப்படத்திலும் நடித்துள்ளனர். 

மேலும் இப்படம் வருகிற ஏப்ரல் 5ல் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 12ல் படம் திரையிடப்படும் என  படக்குழு அதிகாரப்பூர்வமாக  அறிவித்துள்ளது.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close