பிரம்மாண்ட செட்டில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!

  Newstm Desk   | Last Modified : 09 Mar, 2019 08:22 pm
keerthisuresh-next-movie

பிரம்மாண்ட பொருள் செலவில் எடுக்கப்பட உள்ள திரைப்படம் ஒன்றில் நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்திற்காக 7 ஏக்கரில் பிரம்மாண்ட செட் போடப்படுகிறது.

தமிழில் கனவு கன்னியாக திகழ்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ், சென்ற ஆண்டு வெளியான மகாநதி படத்திற்கு பிறகு பாராட்டுக்களை பெற்று வருகிறார். தற்போது அஜித் நடித்து வரும் பிங்க் திரைப்படத்தின் ரீமேக்கான 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும்  மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் தயாரிப்பில் கீர்த்தி நடிக்க இருப்பதாக தெரிகிறது.  இந்த படத்தை  அமித் சர்மா இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகவிருக்கும்  படத்தில் நடிக்க உள்ளார் கீர்த்தி சுரேஷ், இந்த  திரைப்படம் பெரும் பொருள் செலவில் படமாக்கப்பட இருக்கிறது. புதுமுக இயக்குநர் நரேந்திரா இயக்கும் இந்தப் படத்துக்காக, ஹைதராபாத்தின்  ஏழு ஏக்கரில் செட் எழுப்பப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக செட் அமைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், வரும் மார்ச் 15 -ம் தேதி முதல் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close