மிருதன் பட இயக்குனரின் பிறந்த நாள் ; வாழ்த்து சொன்ன பிரபலங்கள்

  Newstm Desk   | Last Modified : 10 Mar, 2019 10:17 am
shakti-soundar-rajan-birthday-today

இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜனின் பிறந்த நாளான இன்று, அவருக்கு பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை  பகிர்ந்து வருகின்றனர்.

இயக்குனர் வெங்கட் பிரபுவின் உதவியாளராக இருந்து இயக்குனராக உருவானவர் சக்தி சவுந்தர் ராஜன்.  இவர்  "நாணயம்", " நாய்கள் ஜாக்கிரதை" உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.  மேலும் தமிழ் சினிமாவில் முதன் முறையாக படமாக்கப்பட்ட மனித ஜோம்பி திரைப்படமான "மிருதன்" திரைப்படத்தை  இயக்கியவரும் இவரே.   இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை குவித்தது. 

மேலும் முதல் ஸ்பேஷ் படமான "டிக்டிக்டிக்" படத்தை சக்தி சவுந்தர் ராஜன் இயக்கியுள்ளார்.  இதில் ஜெயம் ரவி மற்றும் அவரின் மகன் நடித்திருந்தனர். அடுத்ததாக ஆர்யா  நடிக்க உள்ள "டெடி" படத்தையும் சக்தி சவுந்தர் ராஜன் இயக்க உள்ளார். 

இந்நிலையில் சக்தி சவுந்தர் ராஜன் இன்று தனது பிறந்த நாளை ஜெயம் ரவி மற்றும் இசையமைப்பாளர் டீ. இமான் ஆகியோருடன் இணைந்து கொண்டாடும்  புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close