பார்த்திபனின் ஒத்த செருப்பு ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

  Newstm Desk   | Last Modified : 10 Mar, 2019 11:07 am
parthiban-next-movie-first-look-video-release


 பார்த்திபன்  அடுத்து இயக்கவிருக்கும் 'ஒத்த செருப்பு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோவை  ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் விஜய் சேதுபதி.

இயக்குனர் மற்றும் நடிகருமான பார்த்திபன் "ஒத்த செருப்பு'   என பெயரிடப்பட்டுள்ள  திரைப்படத்தை  இயக்குகிறார். இந்த படத்திற்கு  சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மேலும் ராம்ஜி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்க இருக்கிறது. இந்நிலையில் "ஒத்த செருப்பு" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதனை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தனக்கென தனி பாணியை கடைபிடிப்பவர் பார்த்திபன், தனது படங்களில் பாடல் இல்லாத படம், கதை இல்லாத படம், க்ளைமாக்ஸ் இல்லாத படம் எனப் பல முயற்சிகளையும் எடுத்துள்ளார் .  அந்த வரிசையில், 'ஒத்த செருப்பு' படமும் ஒரு புதிய முயற்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close