நடிகை அஞ்சலி  சிந்துபாத்  படத்திற்கான டப்பிங் கொடுக்கும் புகைப்படம்

  Newstm Desk   | Last Modified : 10 Mar, 2019 01:43 pm
anjali-dubbing-photo

அருண்குமார் இயக்கத்தில்  விஜய் சேதுபதி, அஞ்சலி நடித்து வரும் சிந்துபாத் படத்திற்காக‌ அஞ்சலி டப்பிங் கொடுக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் விஜய்சேதுபதி,  அஞ்சலியுடன் "சிந்துபாத்" எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தை அருண்குமார் இயக்கி வருகிறார். இவர் முன்னரே விஜய் சேதுபதியுடன் "பண்ணையாரும் பத்மினியும்", "சேதுபதி" ஆகிய படங்களை இயக்கியவர்.  மேலும் யுவன் சங்கர்  ராஜா இசையமைப்பில் உருவாகி வரும் சிந்துபாத் திரைப்படத்தின் டீசர் இந்த மாதம் 11ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்  வெளியாகி இணையத்தில் வைரலாகியது. இந்நிலையில் சிந்துபாத் படத்திற்காக அஞ்சலி டப்பிங் கொடுக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close