அஜித்தை திரையுலகில் அறிமுகம் செய்தது நான் தான்: எஸ்பிபி

  Newstm Desk   | Last Modified : 10 Mar, 2019 01:43 pm
sbp-about-thala

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் நடிகர் அஜித்தை தான் தான் முதல் முறையாக தெலுங்கு திரைப்படம் ஒன்றில் அறிமுகம் செய்ததாக மூத்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அஜித் குறித்து தனது நினைவுகளை பகிர்ந்துக்கொண்டார். 

அப்போது அவர் பேசும் போது, "அஜித்தும் எனது மகன் சரணும் பள்ளிக்கால நண்பர்கள். முதல் முறையாக விளம்பர படப்பிடிப்பு எல்லாம் வரும் போது சரணின் ஷு, ஷர்ட்டை தான் அணிந்து செல்வார். அது அவரது செண்டிமெண்ட். 

அவரது முதல் படம் தெலுங்கில் தான் வெளியானது. அந்த திரைப்படத்தை நான் தான் தயாரித்தேன். அஜித்திடம் எனக்கு பிடித்தது பேட்டி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேசுவது, சமூக வலைதளங்களில் கருத்து சொல்வது என எதுவும் அவரிடம் இருக்காது. கார், ரேசிங் என இருந்தார், இப்போது அதுவும் இல்லை. சினிமா, குடும்பம் அவ்வளவுதான்’ என்று கூறினார். 

இந்த வீடியோதற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close