ராதிகா சரத்குமாரின் புதிய சாதனை!

  Newstm Desk   | Last Modified : 10 Mar, 2019 02:44 pm
radhika-sarathkumar-new-recordr-new-record

பிரபல நடிகை ராதிகா சரத்குமார்  தொலைக்காட்சி தொடர்களில் நீண்ட நேரம் திரையில் தோன்றி புதிய சாதனை செய்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையாக  திகழ்ந்தவர் ராதிகா.  இவர் பிரபல நடிகரும் ,அரசியல் வாதியுமான சரத்குமாரின் மனைவி.  தற்போது ராதிகா படங்களை காட்டிலும் தொலைக்காட்சி தொடர்களில் தனது ஆளுமையை காட்டி வருகிறார்.  பிரபல தொலைக்காட்சியில் ராதிகா தொடர்ந்து சீரியல்களை தயாரிப்பது மற்றும் நடிப்பது என பிஸியாக உள்ளார்.  மேலும் ராதிகா மற்றும் சரத்குமார் "படைவீரன்" திரைப்பட இயக்குனரின் படத்தில் ஜோடியா நடிக்க உள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில்:  "இதுவரை 6850 எபிஸோடுகளில் நடித்துள்ளேன். மேலும் இது 3430 மணி நேரங்களாகும்.  நடிகை என்ற முறையில் பெருமை கொள்கிறேன் , நான் 2 மாத காலத்திற்கு இடைவேளை எடுக்க உள்ளேன்.  மீண்டும் ஜூன் மாதம் இரவு 9.30க்கு புதிய அவதாரத்தில் உங்களை சந்திக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close