"ராஜபீமா" படப்பிடிப்பு முடிவடைந்தது!

  Newstm Desk   | Last Modified : 10 Mar, 2019 03:33 pm
last-shooting-in-raja-bheema

தனியார் தொலைக்காட்சிகளில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் சீசன் 1-ல் டைட்டில் வென்றவர் ஆரவ். மாடலிங் செய்துக் கொண்டிருந்த இவர், விஜய் ஆண்டனியின் ‘சைத்தான்’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். பிறகு ‘மீண்டும் வா அருகில் வா’ படத்தில் செகண்ட் ஹீரோவாகவும் நடித்திருந்தார்.

தற்போது, ‘ராஜபீமா’ என்ற படத்தில் நடித்து வந்தார். இந்தப் படத்தில் ஒரு யானை முக்கிய வேடத்தில் நடிக்கிறதாம். கருந்தேள் ராஜேஷ் என்பவர் திரைக்கதை – வசனம் எழுதியுள்ள இந்தப் படத்தை நரேஷ் சம்பத் இயக்கியுள்ளார். மேலும் சைமன்.கே.கிங் இசையமைத்து வரும் இந்தத் திரைப்படத்திற்கு எஸ்.ஆர்.சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

 இந்த திரைப்படத்திற்கு கோபி கிருஷ்ணா படத்தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். இதனை ‘சுரபி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.மோகன் தயாரிக்கிறார்.

 

இந்நிலையில் நடிகர் ஆரவ் தனது ட்விட்டர் பக்கத்தில்: "ராஜபீமா"  திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. நாங்கள் விரைவில் உங்களை சந்திப்போம் என அவரது ரசிர்களுக்கு செய்தி தெரிவிக்கும் விதமாக பதிவிட்டுள்ளார்.

 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close