பாரம்பரிய உடை அணிந்து விருது பெற்ற  நடிகர்!

  Newstm Desk   | Last Modified : 11 Mar, 2019 03:30 pm
prabhu-deva-get-the-award

 நடிகர், பாடல் ஆசிரியர் நடன ஆசிரியர்  உள்ளிட்ட பல துறைகளில்  பன்முகம் காட்டி வருபவர் பிரபு தேவா. இவர் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் பல்வேறு மொழிகளில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

இவர் ஏற்கனவே  இரண்டு  தேசிய விருதுகளை பெற்றுள்ளார். மேலும் மத்திய அரசால் வழங்கப்படும் பத்மஸ்ரீ விருதுக்கான பட்டியலில் பிரபு தேவாவும் இடம் பிடித்தார். இதற்காக பிரபலங்கள் பலர் பிரபு தேவாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர்.

 

இந்நிலையில் டெல்லி குடியரசு மாளிகையில் விருது வழங்கும் விழா நடபெற்றது. இந்த விழாவில் குடியரசு தலைவரிடம் இருந்து விருது பெற்ற‌ நடிகர் பிரபு தேவா தமிழக பாரம்பரிய உடையான வேஷ்டி அணிந்து சென்றிருந்தார். அவரின் இந்த எளிமையான உடையலங்காரம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஏனெனில் நடிகர் பிரபுதேவா உடையலங்காரத்தில் வெகு சமீபத்தில் வெளியிடப்படும் விலையுயர்ந்த பேண்ட், சட்டை அணிந்தே விழாக்களில் தோன்றுவதை வழக்கமாகக் கொண்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close