`கோலமாவு கோகிலா' இயக்குனரின் படத்தில் சிவகார்த்திகேயன்?, 

  Newstm Desk   | Last Modified : 11 Mar, 2019 01:12 pm
sivakarthikeyan-next-with-nelson

சிவகார்த்தியேயனின் அடுத்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குவார் என தெரிகிறது. இந்த திரைப்படத்தின் தயாரிப்பையும் சிவ கார்த்திகேயனை மேற்கொள்ள உள்ளாராம். 

'மிஸ்டர் லோக்கல்'  சிவா, 'இன்று நேற்று நாளை' சயின்ஸ் ஃபிக்‌ஷன் உள்ளிட்ட படங்களில் சிவ கார்த்திகேயன் நடித்துவருகிறார் . மேலும்  மித்ரனின் இயக்கத்தில் ஒரு சூப்பர் ஹீரோ படம், சன் பிக்சர்ஸ் தயாரிக்க பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம், 'சிறுத்தை' சிவாவின் இயக்கத்தில் ஒரு படம் என வரிசையாகப் பல படங்களில் நடிக்கிறார்.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் தனது நண்பரான நெல்சன் இயக்கத்தில் நடிப்பார் என தெரிகிறது.  நெல்சன் கோலமாவு கோகிலா படத்தை  இயக்கியவர் ஆவர். இவரின் படத்தில் சிவகார்த்திகேயன் "கல்யாண வயசு" என்கிற பாடலை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நெல்சன் இயக்கவுள்ள திரைப்படத்தை  தன் சொந்த நிறுவனமான எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் மூலம் சிவகார்த்திகேயனே தயாரிப்பார் என தெரிகிறது.  இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close