நிவேதா பெத்துராஜுக்கு ஹாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு :

  Newstm Desk   | Last Modified : 11 Mar, 2019 04:03 pm
nivetha-pethuraj-actin-hollywood

அடியே அழகே பாடலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற நடிகை நிவேதா பெத்துராஜ், அடுத்தடுத்து பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி உள்ள நிலையில் ஹாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு பெற்றுள்ளார்.

பொன் மாணிக்கவேல், ஜகஜால கில்லாடி, பார்டி ஆகிய திரைப்படங்கள் நிவேதா பெத்துராஜ் நடிப்பில் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.  இதனையடுத்து விஜய் சேதுபதியுடன் விஜய் சந்தர் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்குகிறது.  ஒருநாள் கூத்து திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான இவருக்கு ஹாலிவுட்டில் நாயகியாக வேண்டும் என்பது தான் கனவாம். 


இந்நிலையில், அயர்ன் மேன், கேப்டன் அமெரிக்கா, ஸ்பைடர்-மேன், அவெஞ்சர்ஸ் படங்கள் இடம்பெறும் தொடரான மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்சின் புதிய திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்க இருப்பதாகத் தெரிகிறது.

அந்தப் படத்தின் கடைசி சுற்று ஆடிஷனில் பங்கேற்க நிவேதாவுக்கு அழைப்பு வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close