தணிக்கை சான்று பெற்ற "பட்டிபுலம்!"

  Newstm Desk   | Last Modified : 11 Mar, 2019 04:07 pm
paddi-pulam-get-u-a

 வளர்ந்து வரும் காமெடி நடிகர் யோகி பாபு.  இவர் நடித்த முதல் திரைப்படம் இயக்குனர் அமீர் நடிப்பில் வெளிவந்த "யோகி".  கூட்டத்தில் ஒருவராக நடித்து வந்த யோகி பாபு தற்பொழுது முன்னனி பிரபல காமெடி நடிகராக உயர்ந்துள்ளார்.

மேலும் முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார் யோகி பாபு.  "கோலமாவு கோகிலா" படத்தில் தனது தனிப்பெரும் நடிப்பினால் அசத்தி இருப்பார் யோகி பாபு.  அதுமட்டுமின்றி மேலும் 10ற்கும் மேற்பட்ட படங்களை யோகி பாபு தன் கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் யோகி பாபு  ஹீரோவாக நடித்துள்ள படம்  ‘பட்டிபுலம்’.  இந்த திரைப்படத்தை இயக்குனர் சுரேஷ் இயக்கியுள்ளார்.  மேலும் இப்படதிற்கு வல்லவன் இசையமைத்துள்ளார். 

 

 

இந்நிலையில் யோகிபாபு நடித்துள்ள பட்டிபுலம் திரைப்படத்திற்கு தணிக்கை குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.  இந்த திரைப்படம் நடப்பு மாதத்திலேயே திரைக்கு வர உள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close