அரசியல் கூட்டணி மானம் மரியாதையை இழந்த கூட்டணி : பார்த்திபன்

  Newstm Desk   | Last Modified : 11 Mar, 2019 06:23 pm
parthiban-spoke-for-political

இயக்குனர் மற்றும் நடிகருமான பார்த்திபன் "ஒத்த செருப்பு'   என பெயரிடப்பட்டுள்ள  திரைப்படத்தை  இயக்குகிறார். இந்த படத்திற்கு  சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மேலும் ராம்ஜி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் "ஒத்த செருப்பு" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியிடப்பட்டது. இதனை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் படம் குறித்து  பேசியுள்ள பார்த்திபன் : இந்த நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியாவது ஓட்டு வாங்கிவிட வேண்டும் என சுய கௌரவத்தை விட்டுக் கொடுத்தும்,  மானம் மரியாதைக்கு விடுமுறை கொடுத்தும் கூட்டணி அமைப்பதைப் போல் இல்லாமல்,  இப்படத்தில் நான் அமைத்திருக்கும் கூட்டணியால் வெற்றி வாய்ப்பு உறுதியாகிறது  என கூறியுள்ளார்.

மேலும் ஒளிப்பதிவில் உச்சம் தொட்ட ராம்ஜியுடன் நான் இணையும் முதல் படம். பாகுபலியின் வெற்றிக்கு பின்னும் ஆயிரத்தில் ஒருவனின் பெருமையை சொல்லும் சூத்திரதாரிகளின் முக்கியமானவரான ராம்ஜியின் திறமைக்கு சவாலான இன்னொரு படம் இது  என கூறியுள்ளார்.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close