பொள்ளாச்சி சம்பவம் கதி கலங்கச் செய்தது: பார்த்திபன்

  Newstm Desk   | Last Modified : 12 Mar, 2019 09:06 am
actor-director-parthiban-tweets-about-pollachi-rape-case

பொள்ளாச்சியில் இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தன்னை கதி கலங்கச் செய்ததாகவும், இதற்கெல்லாம் தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்றும் இயக்குநர் -நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தையே அதிர வைத்துள்ள பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு பலத்தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் திருநாவுக்கரசு, சபரி, சதீஷ் குமார், வசந்த் குமார் ஆகிய 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளதாக கோவை மாவட்ட எஸ்.பி பாண்டியராஜன் நேற்று தெரிவித்தார். 

 

— R.Parthiban (@rparthiepan) March 11, 2019

 

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து நடிகர்-இயக்குநர் பார்த்திபன் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில், "பொள்ளாச்சி சம்பவம் கதி கலங்கச் செய்தது! 
இவ்வன்முறை வருடம் ஒருமுறை வந்தது போய், மாதம் இருமுறையும், வாரம் ஒரு முறையுமாய் வருவதை, நீதிமன்றத்தின் கடுமையாக்கப்பட்ட தண்டனைகளால் மட்டுமே மட்டுபடுத்தப்படும்" என தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close