பிரேக்கே இல்லாமல் நடைபெறும் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பு!

  Newstm Desk   | Last Modified : 12 Mar, 2019 12:27 pm
naerkonda-paarvai-update

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் பாலிவுட்டில் ஹிட் அடித்த "பிங்க்" படத்தின் ரீமேக்கான "நேர்கொண்ட பார்வை" திரைப்படத்தின் படப்பிடிப்பு சிறிதும் இடைவேளை இல்லாமல் நடைபெற்ற வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சிறுத்தை சிவாவுடன் 4 -ஆவது முறையாக கூட்டணி சேர்ந்து இந்த பொங்கலுக்கு வெளியாகிய அஜித்தின் விஸ்வாசம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து  பாலிவுட்டில் வெளியான 'பிங்க்' படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

யுவன் இசையமைக்கவுள்ள இப்படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யவுள்ளார். போனி கபூர் தயாரித்து வரும் இப்படத்திற்கு நேர்கொண்ட பார்வை என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் எந்த இடைவேளையும் இல்லாமல் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே முடிந்த வரை இந்த திரைப்படத்தை மே 1 -ஆம் தேதி வெளியிட படக்குழு தீவிரம் காட்டி வருவதாக தெரிகிறது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close