அரபு நாட்டில் நடப்பது போல தூக்கிட வேண்டும்: பொள்ளாச்சி வன்கொடுமை குறித்து பா.விஜய்

  Newstm Desk   | Last Modified : 12 Mar, 2019 12:48 pm
pa-vijay-releases-video-on-pollachi-case

பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அதனை வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கு குறித்து வீடியோ வெளியிட்டுள்ள கவிஞர் பா.விஜய், குற்றம் செய்தவர்களை சாலையில் தூக்கிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

மேலும் அந்த வீடியோவில், "இந்த சம்பவத்திற்கு முதலில் கடுமையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஆயிரம் ஆயிரம் பெண் தெய்வங்களை வழிப்படுற கொங்கு மண்டலத்தில் இப்படிப்பட்ட செயல் நடந்திருப்பது பதைக்க செய்கிறது. அவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து சட்டப்படி தண்டனை கொடுக்காமல், அரபு நாட்டில் செய்வது போல கொங்கு மண்ணில் நடுச்சாலையில் வைத்து அனைவரும் பார்க்கும் படி தூக்கில் ஏற்றி அவர்களை தண்டித்தால் மட்டும் தான் இப்படிப்பட்ட பாதக செயல் அடங்கும். 

 

— PA.VIJAY (@pavijaypoet) March 11, 2019

 

இல்லையென்றால், இதேபோல ஆயிரக்கணக்கான பெண்களை அக்கிரமக்காரர்கள் அழித்துக்கொண்டே தான் இருப்பார்கள். 

அதனால் நாம் முறைப்படி செய்ய வேண்டியதை தாண்டி, இதுபோன்ற முறையற்ற மனிதர்களை நாம் வேறருக்க வேண்டும் என்பதை அனைத்து பொதுமக்கள் சார்பிலும், நீதியின் முன்பும் காவல் துறையின் முன்பும் ஒரு கோரிக்கையாக முன் வைக்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.  

கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக குரல் எழுப்பும் நடிகர்கள்

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close