"தளபதி 63" : நயன்தாராவின் பகுதிக்கான படப்பிடிப்பு துவங்கியது:

  Newstm Desk   | Last Modified : 12 Mar, 2019 03:49 pm
nayanthara-shoot-starts-in-thalapathy-63

மெர்சலுக்குப் பிறகு அட்லி இயக்கும் புதிய படத்திலும் ஹீரோவாக நடிகர் விஜய் நடித்து வருகிறார். விஜய்யின் 63-வது படமான இதனை ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கிறது.

அதோடு அட்லீ - விஜய் காம்போவில் வெளியான முந்தைய படங்களில் இடம்பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு, கலை இயக்குநர் முத்துராஜ், எடிட்டர் ரூபன் ஆகியோர் இந்தப் படத்திலும் இணைந்துள்ளனர். 

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில்  பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படம் பிடிக்கப்பட்டு உருவாகி வருகிறது.  மேலும் 'தளபதி 63’ திரைப்படத்தின் பாடல், சண்டை உள்ளிட்ட படப்பிடிப்பு காட்சிகள் சமீபத்தில் எடுத்து முடிக்கப்பட்டன.

இந்நிலையில்,  'தளபதி 63' திரைப்படத்தின் நாயகியான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தோன்றும் பகுதிகளுக்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒரு வாரத்திற்கு நடைபெறும் ஷூட்டிங்கில் நயன்தாராவின் காட்சிகள் படமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close