தேர்தலை முன்னிட்டு இந்தியன் 2 படப்பிடிப்பு ஒத்திவைப்பு 

  Newstm Desk   | Last Modified : 12 Mar, 2019 08:53 pm
indian-2-shoot-to-resume-after-elections

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது . இந்த தேர்தலில் நடிகர் கமல்ஹாசன் போட்டியிட உள்ளார். இதனை முன்னிட்டு சங்கர்  இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவரும் இந்தியன்2 திரைப்படத்தின் படப்பிடிப்பு   ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  ஜனவரியில் துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு  வரும் மே மாதத்திற்கு  பிறகு துவங்கும் என படக்குழு தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளார். மேலும் லைகா புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ரவி வர்மா ஒளிப்பதிவு செய்கிறார். ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணகுமார் ஆகியோர் வசனம் எழுதுகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close