நயன்தாராவை ஷேர் ஆட்டோவில் வர சொன்ன யோகிபாபு!

  Newstm Desk   | Last Modified : 13 Mar, 2019 12:10 pm
yogibabu-humour-in-airaa

யோகிபாபு - நயன்தாரா கூட்டணியில் வெளிவந்த "கோலமாவு கோகிலா" திரைப்படம் காமெடியில் கலக்கியது. இதனை அடுத்து ஐரா படத்திலும் இவர்களின் கூட்டணிக்கு நகைச்சுவைக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நயன்தாரா, யோகி பாபு நடித்துள்ள இந்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் யோகிபாபு நயந்தாராவிடம் "நான் வேகமாக ஓடுவேன், உன்னால முடியாது , நீ ஷேர் ஆட்டோ பிடுச்சு வந்துரு" எனும் வாசகத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்  இணையத்தில் வைரலாகிறது.

மேலும்  லக்ஷ்மி, மா என்ற குறும்படங்களை இயக்கிவந்த சர்ஜுன்.கே.எம் இயக்கும் இந்த திரைப்படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சுந்தரமூர்த்தி இசையமைக்கும் இப்படம் நயன் தாராவின் 63 ஆவது படமாம். எனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close