300 மில்லியன் வியூஸ்: தொடர்ந்து கலக்கி வரும் ரவுடி பேபி

  Newstm Desk   | Last Modified : 14 Mar, 2019 11:53 am
rowdy-baby-reaches-300-million-views

மாரி 2 படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள ரவுடி பேபி பாடலின் வீடியோ  வெளியானது  முதல் பல சாதனைகள் படைத்து வரும் நிலையில் தற்போது யூடியூப்பில் 300 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனைப்படைத்துள்ளது. 

மாரி படத்தின் இரண்டாம் பாகமாக கடந்த மாதம் திரைக்கு வந்த படம் மாரி 2. தனுஷ் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பாலாஜி மோகன் இயக்கிய இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

கடந்த டிசம்பர் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான வரவேற்பைப் பெற்றது. 10 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ் - யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி இந்தப் படத்தின் மூலம் இணைந்து ரசிகர்களுக்கு இசை விருந்து அளித்திருந்தனர்.

தனுஷ் எழுதி பாடியிருந்த ரவுடி பேபி பாடலுக்கு இயக்குநரும் நடிகருமான பிரபு தேவா நடனம் அமைத்திருந்தார். இந்த பாடல் வீடியோ வெளியானதில் இருந்து தொடர்ந்து பல சாதனைகளை செய்து வருகிறது. 

 

 

இந்நிலையில் இந்த பாடல் வீடியோ தற்போது 300 மில்லியன் பார்வகைளை யூடியூப்பில் பெற்றுள்ளது மேலும் இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close