குர்குரே விளம்பரம்: எதிர்ப்புகளுக்கு விளக்கம் அளித்த சமந்தா!

  Newstm Desk   | Last Modified : 14 Mar, 2019 12:25 pm
samantha-s-answer-to-troll

நடிகை சமந்தா திரையில் முகம் காட்டுவது போல பல விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் நடித்த குர்குரே விளம்பரத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில்  அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தென்னிந்தியாவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகை சமந்தா. அடுத்தடுத்து பல திரைப்படங்களில் பிசியாக இருக்கும் அவர் அவ்வபோது விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் குர்குரே விளம்பரத்தில் நடித்திருந்தார். 

அந்த விளம்பரத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ஃபிட்னசில் பெரிதாக கவனம் செலுத்தும் சமந்தா, தனது சமூக வலைதளபக்கத்தில் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்வார். இந்நிலையில் அவர் மட்டும் சாலட் சாப்பிட்டுவிட்டு, மற்றவர்களுக்கு ஆரோக்கியம் இல்லாத பொருட்களை சாப்பிடுங்கள் என்று விளம்பரம் செய்கிறார் என்று சிலர் கேள்வி எழுப்பினர்.

 

 

அதற்கு பதில் அளித்துள்ள சமந்தா, "நான் ஞாயிற்றுக்கிழமைகளில் என்ன சாப்பிடுவேன் என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். நான் ஆரோக்கியமான உணவை தான் சாப்பிடுகிறேன். ஆனால் வாரத்தில் ஒருநாள் 'சீட்' நாளாக வைத்துக்கொள்வேன். மேலும் நொறுக்கு தீனிகளும் நிறைய சாப்பிடுவேன். மற்றவரக்ள் போல குர்குரேவும் சாப்பிடுவேன். பலர் கேட்கும் கேள்விகளுக்கும் நான் கேட்கும் கேள்விகளுக்கும் குர்குரே தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close