சிவகார்த்திகேயனுடன் நடிக்க உள்ள ஐஸ்வர்யா ராஜேஷ்

  Newstm Desk   | Last Modified : 14 Mar, 2019 03:39 pm
sivakarthikeyan-has-got-aishwarya-rajesh-as-pair

பாண்டியராஜன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வைக்க நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிடம் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக கூறப்படுகிறது. 

மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட படங்களில் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கியவர் இயக்குநர் பாண்டிராஜ். இவர் அடுத்ததாக இயக்கவிருக்கும் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க இருப்பதாக முன்பே அறிவிக்கப்பட்டது. 

சிவகார்த்திகேயனின் 16வது திரைப்படமான இது குறித்து அப்போது எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. 

முன்னதாக கடந்தாண்டு சிவாகார்த்திகேயன் தயாரித்த கனா திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close