'தி வேர்ல்ட்’ஸ் பெஸ்ட்' சிறுவனின் வீட்டிற்கே சென்று பாராட்டிய ரஹ்மான்

  Newstm Desk   | Last Modified : 15 Mar, 2019 08:40 am
ar-rahman-s-visited-lydian-s-house

அமெரிக்காவில் நடைபெற்ற தி வேர்ல்ட்’ஸ் பெஸ்ட் எனும் நிகழ்ச்சியில் தனது அசாத்திய பியானோ வாசிக்கும் திறமையால் அனைவரையும் அசத்திய முதலிடம் பிடித்த சென்னையை சேர்ந்த சிறுவன் லிடியனின் வீட்டிற்கு சென்று ரஹ்மான் பாராட்டு தெரிவித்துள்ளார். 

கடந்த  பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட 'தி வேர்ல்ட்’ஸ் பெஸ்ட்' நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளிலிருந்து  கலைஞர்கள் குழுவாகவும் , தனி நபராகவும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சென்னையைச் சேர்ந்த பியானோ கலைஞரான சிறுவன் லிடியன் நாதஸ்வரம் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்ட எட்ட உலகம் முழுவதும் லிடியன் திறமைப்பற்றி அனைவரும் பேசத்தொடங்கி விட்டனர். இந்நிலையில் இந்தப் போட்டியில் இறுதிச் சுற்றில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார் லிடியன் நாதஸ்வரம்.

சாம்பியன் பட்டத்துடன் சென்னை வந்த லிடியனை இசைப்புயல் ரஹ்மான் நேரில் சென்று வரவேற்றார். இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ரஹ்மான் லிடியனுக்கு வாழ்த்து தெரிவித்தார். ''லிடியன் இசையின் மந்திரத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இசையின் சர்வதேச தூதராக லிடியன் நியமிக்கப்பட வேண்டும்'' என்று ரஹ்மான் தெரிவித்தார்.மேலும் பலரும் லிடியனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close