ஹாலிவுட்டின் கிளாசிக் பட ரீமேக்கில் அமீர் கான்

  Newstm Desk   | Last Modified : 15 Mar, 2019 09:27 am
aamir-khan-to-remake-forrest-gump-for-india

ஹாலிவுட்டில் வெளியாகி இன்றளவும் உலக சினிமா ரசிகர்களால் அதிகம் பாராட்டப்படும் ஃபாரஸ்ட் கம்ப் திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் நடிகர் ஆமிர்கான் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. 

1994ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான திரைப்படம் ஃபாரஸ்ட் கம்ப். ராபர்ட் ஸெமிக்ஸ் இயக்கத்தில் டாம் ஹாங்ஸ் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் 1986ல் வின்ஸ்டன் க்ரூம் எழுதிய நாவலின் அடிப்படையில் உருவான படம். இத்திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த தழுவல் திரைக்கதை, சிறந்த கிராபிக்ஸ், சிறந்த படத்தொகுப்பு உள்ளிட்ட பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளையும் பெற்றுள்ளது.

தற்போது இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கில் தான் நடிக்கவுள்ளதாக நடிகர் ஆமிர்கான் தெரிவித்துள்ளார். ஆமிர் கானின் 54வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "எனது அடுத்த படத்தின் டைட்டில் 'லால் சிங் சட்டா'. வயாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் மற்றும் ஆமிர் கான் ப்ரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. அத்வைத் சந்தன் இயக்கவுள்ளார். இது ஹாலிவுட் திரைப்படமான 'ஃபாரஸ்ட் கம்ப்' படத்தைத் தழுவி எடுக்கப்படும். பாராமவுண்ட் நிறுவனத்திடமிருந்து உரிமைகளை வாங்கியுள்ளோம். நான் லால் சிங் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளேன்.  படப்பிடிப்பு அக்டோபரில் ஆரம்பமாகும். நான் 6 மாதங்கள் முன் தயாரிப்புக்கு எடுத்துக் கொள்கிறேன்" என்றார். 

மேலும் இந்த படத்திற்காக 20 கிலோ வரை எடை குறைக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close