சூப்பர் டீலக்ஸ் படத்தில் 30 டேக் வாங்கிய ரம்யா கிருஷ்ணன்

  Newstm Desk   | Last Modified : 15 Mar, 2019 11:29 am
ramya-krishnan-about-super-deluxe

சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பில் 30 டேக்குகள் எடுத்துக்கொண்டதாக நடிகை ரம்யா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

ஆரண்ய காண்டம் பட இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா  அடுத்ததாக இயக்கி இருக்கும் திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, பஹத் பாசில், ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, மிஷ்கின் என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளது. 

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் 29ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா மற்றும் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் பேட்டி தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்திருந்தனர். 

அந்த பேட்டியில் பேசிய ரம்யா, “என் வாழ்க்கையிலேயே இத்தனை டேக்குகள் நான் வாங்கியதில்லை. இதன்பிறகும் இத்தனை டேக்குகள் வாங்குவேனா என்று தெரியாது. என் முதல் படத்தில் கூட இவ்வளவு டேக் வாங்கியதில்லை. இந்த திரைப்படத்தில் எனது முதல் ஷாட்டிற்காக 30 டேக்குகள் எடுத்தேன்" என தெரிவித்துள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close