ஃபாரஸ்ட் கம்ப் ரீமேக்கில்  அமீர் கான்

  Newstm Desk   | Last Modified : 16 Mar, 2019 12:43 pm
forrest-gump-movie-remake

ஃபாரஸ்ட் கம்ப்  படம் 1994-ம் ஆண்டு டாம் ஹேங்க்ஸ் நடித்து சர்வதேச அளவில் வெற்றிகளையும் பாராட்டுகளையும் பெற்ற படமாகும்.  மேலும்  சிறந்த இயக்குநர், சிறந்த படம், சிறந்த நடிகர் உள்ளிட்ட ஆறு ஆஸ்கர் விருதுகளை வென்றது.  ஃபாரஸ்ட் கம்ப்  படத்தின் தழுவலை இந்தியில் எடுக்கவுள்ளார் அமீர்.  இப்படத்துக்கு 'லால் சிங் சத்தா' எனப் பெயர் வைத்துள்ளார். இத்தகவலை அமீர் கான் நேற்று  செய்தியாளர்கள் சந்திப்பின் போது  தெரிவித்துள்ளார்.

"சீக்ரெட் சூப்பர்ஸ்டார்" படத்தை இயக்கிய அத்வைத் சந்தன் இந்தப் படத்தை இயக்கவுள்ளார். மேலும் , அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்கப் போவதாகவும் , 2020-ல் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் அமீர் தெரிவித்துள்ளார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close