நண்பருடன் இணைந்த விஷ்ணு விஷால்:

  Newstm Desk   | Last Modified : 17 Mar, 2019 10:34 am
vishnu-vishal-and-vikranth-act-in-movie

நடிகர் விஷ்ணு விஷால் தனது கிரிக்கெட் தோழனான விக்ராந்த்துடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை விக்ராந்தின் சகோதரர் சஞ்ஜீவ் இயக்க உள்ளார். மேலும்  இந்தப் படத்துக்கான வசனத்தை நடிகர் விஜய் சேதுபதி எழுதியுள்ளார் என்பதுதான் சிறப்பு.  

இருவரும் கிரிக்கெட் வீரர்கள் என்பதால் இது "கிரிக்கெட் தொடர்பான கதை"யாக இருக்கும்   என எதிர்பார்க்கப்படுகிறது.   இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கிறது. 

ஏற்கனவே பிரபு சாலமன் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வரும் `காடன்’ படத்தின் தமிழ், தெலுங்கு வெர்ஷனில் நடித்து வருகிறார் விஷ்ணு விஷால்.  அதேபோல்  `வெண்ணிலா கபடிக் குழு - 2’, `சுட்டுப் பிடிக்க உத்தரவு’, `பக்ரீத்’ என விக்ராந்த் நடிப்பில் உருவான மூன்று படங்கள் திரைக்கு வர தயாராக உள்ளன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close