சாஹோ குறித்து ட்விட் செய்த அருண் விஜய்

  Newstm Desk   | Last Modified : 18 Mar, 2019 11:35 am
arunvijay-twitt-about-sahoo

 சுஜீத்ரெட்டி இயக்கத்தில்  பிரபாஸ் நடித்து வரும் படம் 'சாஹோ. இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூரும், முக்கிய வேடத்தில் அருண் விஜயும் நடிக்கிறார்கள்.  இப்படத்திற்கு மதி ஒளிப்பதிவு செய்ய, சங்கர்-இஷான்-லாய்  இசையமைக்கின்றனர்.  300 கோடி ரூபாய் பொருட் செலவில் உருவாகும் இப்படத்தின், படப்பிடிப்பை மும்பை, ஹைதராபாத், துபாய் உள்ளிட்ட இடங்களில் நடத்தி உள்ளனர்.  தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படம் ஆகஸ்ட் 15ல்  திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில்  "சாஹோ' படத்தில் அருண்  விஜய் வரும் காட்சிக்கான படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதனை கேக் வெட்டி படக்குழுவோடு கொண்டாடிய அருண் விஜய்,  இது குறித்து  தனது ட்விட்டர் பக்கத்தில், படகுழுவிற்கு நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் .

 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close