ஒருத்தனையும் உயிரோட விட மாட்டேன் - மிரட்டும் நயன்தாராவின் 'ஐரா' ட்ரைலர்!

  Newstm Desk   | Last Modified : 20 Mar, 2019 05:49 pm
airaa-official-trailer

'லேடி சூப்பர்ஸ்டார்' நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள த்ரில் சஸ்பென்ஸ் திரைப்படமான 'ஐரா' படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது. 

சர்ஜூன் இயக்கத்தில் நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம் தான்  'ஐரா'.  நயன்தாராவுடன் கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்பட பலர் நடித்துள்ள இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.  சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில், கார்த்திக் ஜோகேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் மற்றும் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

தொடர்ந்து, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது. 

ட்ரைலரை பார்க்கும் போது, நயன்தாரா யமுனா, பவானி என்ற இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளது ஊர்ஜிதமாகிறது.

`சூப்பரா இருக்குற படத்த மொக்கணு சொல்லணும்; பிரைம் மினிஸ்டர கழுவிக் கழுவி ஊத்தணும்; எது நடந்தாலும் இலுமினாட்டிதான் காரணம்னு சொல்லணும்' என்ற யூட்யூப் சேனலின் தற்போதைய நிலை பற்றி யமுனா கூறுகிறார். 

தொடர்ந்து, 'இல்லாத பேயை இருக்குனு சொன்னாதான் ஆடியன்ஸ் பாப்பாங்க; அதனால இல்லாத பேயை இருக்குற மாதிரி வீடியோ பண்ணி யூட்யூப் ல போடுவோம்' னு ஆரம்பிக்குறது, நிஜமாகவே யமுனா, ஒரு பேயை(பவானி) சந்திப்பது போன்ற காட்சிகள் இடம்பெறுகிறது. 

இறுதியில், 'இந்த உலகத்துல யாருமே கொடுக்காத சந்தோஷத்த நீ எனக்கு கொடுத்த அமுதா; அத அழிச்ச ஒருத்தனையும் உயிரோட விட மாட்டேன்' என்றும் 'நான் தொடங்கினதை நானே முடிச்சு வைக்கிறேன்' என்ற வசனங்களுடன் அதிரடியாக ட்ரைலர் முடிவடைகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close