பிரதமர் மோடி திரைப்படத்தின் டிரைலர் வெளியானது!

  Newstm Desk   | Last Modified : 21 Mar, 2019 10:28 am
pm-modi-movie-trailer

விவேக் ஓபராய் நடிப்பில் உருவாகி இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

பி.எம்.நரேந்திர மோடி" என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு வருகிற பாலிவுட் படத்தில் பிரதமர் மோடியாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். இந்தப் படத்தின் "பர்ஸ்ட் லுக்" போஸ்டர் ஜனவரி மாதம் 7ம் தேதி வெளியானது. 

இதனை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் வெளியிட்டார். 23 மொழிகளில் தயாராகி உள்ள இந்த திரைப்படத்தை சுரேஷ் ஓபராய் மற்றும் சந்திப் எஸ் சிங் ஆகியோர் தயாரித்துள்ளனர். 

இதில் பிரதமர் நரேந்திர மோடியின் இளமைக்காலம் மற்றும் அரசியலில் அவர் அடைந்த வளர்ச்சி ஆகியவற்றை விவரிக்கும் படமாக உருவாகி உள்ளது.  ஓமங் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் பொம்மன் இரானி, பர்கா பிஷ்ட், மனோஜ் ஜோஷி, ஜரினா வஹாப், பிரஷாந்த் நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் ஏப்ரல் 12ம் தேதி வெளியாகும் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த திரைப்படம் முன்கூட்டியே ஏப்ரல் 5ம் தேதி வெளியிடுகிறோம் என படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சந்திப் எஸ் சிங் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. 

இந்த டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேறப்பு கிடைத்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close