SK17 படத்தில் அனிருத் இசை!

  Newstm Desk   | Last Modified : 21 Mar, 2019 11:14 am
sk17-movie

சிவ கார்த்திகேயன் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தினை விக்னேஷ்  சிவன் இயக்க அனிருத் இசையமைக்கிறார். மேலும் பிக் பட்ஜெட்டில் உருவாக இருக்கும்   SK17ஐ லைகா புரொடக்ஷன் தயாரிக்க உள்ளனர். ஜூலை 2019 ல்  தனது படப்பிடிப்பை துவங்கும் SK17  2020 ல் திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது.

ஏற்கனவே , பண்டியராஜன் இயக்கத்தில் SK16  திரைப்படத்தை  சிவகார்த்திகேயன்  தன் கைவசம் வைத்துள்ளார். மேலும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஸ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அடுத்த வருடம்  பொங்கலுக்கு ரீலிஸ் ஆகவிருக்கும் இப்படத்தினை  சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close