தேர்தலில் போட்டியிடவில்லை: சல்மான் கான் விளக்கம்

  Newstm Desk   | Last Modified : 21 Mar, 2019 07:18 pm
i-am-not-contesting-elections-nor-campaigning-salman-khan

நாடாளுமன்ற தேர்தரலில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் போட்டியிட இருப்பதாக வந்த தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்ததோடு எந்த கட்சிக்கும் பிரச்சாரமும் இல்லை என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

ஏப்ரல் 11ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் தொடங்க உள்ள நிலையில் அனைத்துக்கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரமாக செய்து வருகின்றன. பல கட்சிகள் பிரச்சாரத்திற்கு நட்சத்திர பேச்சாளர்களாக  நடிகர்களை நாடி உள்ளனர். இந்நிலையில் பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் நடிகர் சல்மான் கான், காங்கிரசுக்கு பிரச்சாரம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகின. 

 

— Salman Khan (@BeingSalmanKhan) March 21, 2019

 

இந்தூரில் பிறந்த சல்மான் கான் அந்த பகுதியில் காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்வார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இச்செய்தியை சல்மான் மறுத்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் தேர்தலில் போட்டியிடவில்லை, எந்த கட்சிக்காகவும் பிரச்சாரம் செய்யப்போவதும் இல்லை" என தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close