நடிகர் வைபவுடன்  இணையும் சின்னத்திரை நடிகை!

  Newstm Desk   | Last Modified : 22 Mar, 2019 10:55 am
vaibhav-next-film-actress

ஆர் கே நகர், காட்டேரி படத்திற்குப் பிறகு வைபவ் ரெட்டி நடிக்க உள்ள படத்தை நடிகர் நிதின் சத்யா தயாரிக்க உள்ளார். இவர்  சென்னை 28, சரோஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். பின்னர் நடிகர் நிதின் சத்யா "ஷ்வேத்" என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து 'ஜருகண்டி' என்ற படத்தைத் தயாரித்துள்ளார். அந்த படத்தில் ஜெய், ரெபா மோனிகா ஜான், டேனியல் அன்னி போப் ஆகியோர் நடித்திருந்தனர். 

நிதின் சத்யா  தயாரிக்கும்  அடுத்த படத்தில்  நடிகர் வைபவ் கதாநாயகனாக நடிப்பதாகவும், அது  க்ரைம் த்ரில்லர் படமாக  உருவாகும் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது . இந்நிலையில் இந்தப் படத்தில் கதாநாயகியாக சின்னத்திரை நடிகை வாணி பூஜன் அறிமுகமாக‌  உள்ளார் . மேலும் பிரபு சார்லஸ் என்பவர் இயக்குகிறார். 

வைபவ் நடித்த மேயாத மான் திரைப்படத்தில் சீரியல் ஹீரோயின் ப்ரியா பவாணி சங்கர் அறிமுகம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close